×

குடும்பத்தினுடன் போனில் பேச வேண்டும்: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மிக்சேல் மனு தாக்கல்

டெல்லி: குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞரிடம் போனில் பேச அனுமதி கோரி கிறிஸ்டியன் மிக்சேல் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஐ.மு.கூ ஆட்சியின் போது அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12  ஹெலிகாப்டர்களை வாங்க 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள சிலருக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது.  இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு  இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக பலர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து  விமானம் மூலம் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார். டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டியன் மிக்சேல் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்கறிஞரிடம் போனில் பேச அனுமதி கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனு குறித்து சிறை கண்காணிப்பாளர் ஜன.14-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mikhail ,Christian ,court , Family, phone, Delhi, CBI court, Christian Mikhail, filed
× RELATED கல்லறை தோட்டத்தில் சடலங்களை புதைக்க...